ஆசீர்வசிப்பது போல் மாறியது கை : நம்பிக்கையில் அலைமோதும் மக்கள் கூட்டம் : புதுக்கடையில் பரபரப்பு
புதுக்கடை: புதுக்கடை தூய விண்ணக அன்னை ஆலய சொரூபத்தில் இருந்த குழந்தை ஏசுவின் கை ஆசீர்வசிப்பது போல் திடீரென்று மாறியதால் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. புதுக்கடை அருகே தூய விண்ணக அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் மிகவும் பழமையானது. இந்த ஆலயத்தில் கடந்த 11ம் தேதி பிஷப் பீட்டர் ரெமிஜியூஸ் மேரிமாதாவுடன் கூடிய குழந்தை ஏசு சொரூபத்தை அர்ச்சித்து திறந்து வைத்தார். அர்ச்சிப்பின் போது குழந்தை ஏசுவின் கை மடங்கி இருந்ததாக கூறுகின்றனர். பின்னர் திடீரென இந்த கை பக்தர்களை ஆசீர்வதிப்பது போல உயர்ந்துள்ளது. இந்த அதிசயத்தை நேற்று முன்தினம் மாலை சிலர் பார்த்துள்ளனர். உடனே இவர்கள் தங்கள் உறவினர்களிடமும், நண்பர்களிடமும் கூறியுள்ளனர். அதிசய சொரூபத்தை நூற்றுக்கணக்கானோர் பார்வையிட்டு செல்கின்றனர். இது குறித்து புதுக்கடை தூய விண்ணக அன்னை ஆலய பங்குத்தந்தை இன்னசென்ட் அடிகளார் கூறியதாவது: கடந்த 1700ம் ஆண்டு புதுக்கடையில் சர்ச் கட்டப்பட்டது. பின்னர் அதை இடித்துவிட்டு 1846ம் ஆண்டு புதிய ர்ச் கட்டப்பட்டது. 1911ம் ஆண்டு இந்த வளாகத்தில் தூய விண்ணக அன்னை ஆலயம் கட்டப்பட்டது. இந்த ஆலயம் கட்டி கடந்த 11ம் தேதி நூறு ஆண்டுகள் ஆனது. இதை நினைவு கூரும் விதத்தில் செங்கோல் மார்க் கெபி நிறுவப்பட்டது. இந்த கெபியில் குழந்தை ஏசுவுடன் கூடிய மேரிமாதா சொரூபம் அர்ச்சிக்கப்பட்டது. அர்ச்சிப்பின் போது குழந்தை ஏசுவின் கை மடங்கி இருந்தது. தற்பொழுது கை ஆசீர்வசிப்பது போல் உயர்ந்துள்ளது. இவ்வாறு இன்னசென்ட் அடிகளார் கூறினார்.
No comments:
Post a Comment